மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக நீர்த்திறப்பு!!

 
tn

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

tn

ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு டெல்டா குறுவை சாகுபடிக்காக   ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி ,தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்க நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

mettur dam

குறுவை சாகுபடிக்காக 90 ஆண்டுகளில் 19வது முறையாக உரிய காலமான ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  சம்பா, தாளடி பயிர்களுக்கு இன்று முதல் அடுத்த ஆண்டு 28ஆம் தேதி வரை மொத்தம் 22 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையில் நீர் பாசனத்திற்காக தண்ணீரை இன்று திறந்து வைத்தார். மேட்டூர் நோக்கி தமிழக முதல்வர் சாலை மார்க்கமாக பயணத்தை தொடங்கிய நிலையில் மேட்டூர் அணை பகுதிக்கு வந்தடைந்தார். இதையடுத்து அவர் மேட்டூர் அணை நீரை திறந்து வைத்தார்.  இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன் , கே.என்.நேரு  உள்ளிட்டோர்  உடன் இருந்தனர்.