சாலையில் திடீரென 50 அடி உயரத்துக்கு பீய்ச்சியடித்த தண்ணீர்- பதறிப்போன பகுதிவாசிகள்
Updated: May 23, 2025, 16:00 IST1747996239024
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் உள்ள நடூர் பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் உள்ள நடூர் பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாலையில் திடீரென 50 அடி உயரத்துக்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. பவானி ஆற்றில் இருந்து திருப்பூருக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் குழாயில் அதிக அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பூர் குடிநீர் குழாய் உடைந்ததால் கனநேரத்தில் சாலை ஆறாக மாறியது. தண்ணீர் அதிக அளவில் வெளியேறி வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குழாய் உடைப்பு குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமை விரைவில் சரிசெய்யப்படும் என தெரிகிறது.


