ஓபிஎஸ் வேட்பாளரை திரும்பப்பெற வேண்டும் ; இன்று மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் - அண்ணாமலை

 
Annamalai

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பாக வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை  என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

annamalai

இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்,  கூட்டணி தர்மத்தின் படி ஒரே ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும்.  தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் கொடுத்த அபிடவிட் பலருக்கும் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது . அதிமுக இணைந்து இரட்டை இலையில் போட்டியிட வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். அந்த வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

ops annamalai

சுயேச்சை வேட்பாளர்களுக்கு பாஜக ஒருபோதும் ஆதரவு அளித்ததில்லை. அதிமுக உட்கட்சி பிரச்சனையில் தலையிட மாட்டோம். . அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு இன்று மாலைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை. ஒரு வேட்பாளர் இரட்டை இலை  சின்னத்தில் போட்டியிட வேண்டும் .அவரது வெற்றிக்கு இணைந்து பாஜக பணியாற்றும்.
அதிமுகவின் 2ஆம் கட்ட தலைவர்களின் கருத்து தமக்கு பயத்தை அளிக்கிறது. இன்னொரு கட்சியின் பலவீனத்தை வைத்து வளர நினைத்தால் அது நிலைக்காது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்குமாறு ஓ. பன்னீர் செல்வத்துக்கு பாஜக தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. எங்கள் வேண்டுகோளை ஓ. பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறோம் என்றார்.