மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: ஐஐடி விளக்கம்
மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சென்னை ஐஐடி விளக்கம் அளித்துள்ளது.

சென்னை ஐஐடி ஹாஸ்டலில் படிக்கும் மாணவி தேநீர் குடிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பேக்கரியில் பணியாற்றும் ஊழியர் ஸ்ரீராம் (30) மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து ஸ்ரீராமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சென்னை ஐஐடி, “மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதற்கும், ஐஐடிக்கும் எந்த தொடர்பும் இல்லை, வளாகத்திற்கு வெளியே உள்ள பேக்கரிக்கு மாணவி சென்றிருந்தபோது அத்துமீறல். ஐஐடி வளாகத்தைவிட்டு மாணவிகள் வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.


