ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இணைவது குறித்து நாங்கள் தான் முடிவு செய்யனும் - எடப்பாடி பழனிசாமி..!!

 
eps eps


ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

திருப்பத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவரிடம் , பாஜக கூட்டணியுடன் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைந்து செயல்படுவார் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு பதிலளித்த அவர், “பாஜக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்குகிறது. எனவே நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த சூழ்நிலை வரும்போது அதற்கான பதிலை நாங்கள் தருவோம்” என்றார். 

Ops

மேலும், இபிஎஸிடம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், நீங்களும்(இபிஎஸ்) ஒரே மேடையில் பேச உள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்க,  “நீங்கள் இது குறித்து நயினார் நாகேந்திரனிடம் தான் கேட்க வேண்டும்” என்று கூறினார்.  

அதேபோல் அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஆகியோர் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இது சுதந்திர நாடு; ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த கட்சியை  சேர்ந்தவர்கள் அந்தக் கட்சிக்கு போகக்கூடாது என யாரும் தடுக்க முடியாது. எல்லோரும் கட்சி மாறி மாறி தான் இருக்கிறார்கள். கட்சியின் விதிகளை மிறுபவர்களை கட்டியில் இருந்து அகற்றுவதும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இணைப்பதும், தமிழக அரசியல் வரலாற்றில் புதிதல்ல” என்று தெரிவித்தார்.