முதலமைச்சர் குறித்து அவதூறு - "பொதுக்கூட்டம் கூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்"!!

 
rn

கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் கள்ளக்குறிச்சி நகர திமுக சார்பில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுருவை கண்டித்து திமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுகவினர் அதிமுக மாவட்ட செயலாளர் உருவப்படத்தை எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

tn

இதையடுத்து பொதுக்கூட்டத்தில் நான் நீட் தேர்வு பற்றி பேசியபோது வாய் தவறி தவறுதலாக ஒரு வார்த்தையை சொல்லி விட்டேன். உள்நோக்கம் இல்லாமல் என்னை அறியாமல் பிறர் மனம் புண்படும் வகையில் நான் பேசிய அந்த வார்த்தைக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று வருத்தம் தெரிவித்து கொண்டார்.

high court

இந்நிலையில் முதலமைச்சர் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இதற்காக ஒரு பொதுக்கூட்டத்தின் கூட்டி நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன்  வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.