அஞ்சலையம்மாளின் அரும்பணிகளை போற்றுவோம் : தவெக தலைவர் விஜய்..!!

 
tvk tvk


அஞ்சலை அம்மாள்  பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்திய சுதந்திரப் போராட்ட காலக்கட்டங்களில் பங்கேற்று ஈடு இணையற்ற தியாகங்களைச் செய்தவர் அஞ்சலையம்மாள். வீரப்பெண்மணி என மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்டவர். அவரது 135வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள அஞ்சலையம்மாள் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். 

அஞ்சலையம்மாளின் அரும்பணிகளை போற்றுவோம் : தவெக தலைவர் விஜய்..!!

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்கள். விடுதலைப்  போராட்டக் களத்தில் அவரது போர்க்குணம் போற்றுதலுக்கு உரியது. 

கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்த நாளில் தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிப் பெருமை கொள்வோம். மேலும் அவரது பிறந்தநாளையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.