அம்மோனியா வாயு கசிவு விபத்து குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்துவோம் - தமிழக பாஜக

 
tn

அம்மோனியா வாயு கசிவு விபத்து குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய சுற்றுசூழல் துறைக்கு வலியுறுத்துவோம் என்று தமிழக பாஜக  தெரிவித்துள்ளது.

எண்ணூர் பெரியகுப்பத்தில் ஆழ்கடல் குழாயில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட பகுதியை,மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை Ex IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு.எம்.கிருஷ்ணகுமார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் திரு ஆர்.பி.கோபிநாத், மாநில செயலாளர் திரு மு.குணசேகர், மாவட்ட துணைத் தலைவர் திரு.பல்லவராயர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் திரு எஸ்.ரவிச்சந்திரன் ,கத்திவாக்கம் மண்டல் தலைவர் திரு.சுரேஷ் தேவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

tn

மூன்று நாட்களாக தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கும் பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, இவற்றை அரசுக்கு வலியுறுத்துவோம் என்றும், பாஜக மக்களுடன் துணை நிற்கும் என்றும் உறுதியளித்தனர்.



 மேலும், பாதிக்கப்பட்டு நோயாளிகளை வீட்டிலும் ,மருத்துவமனையிலும் சென்று பழவகைகளை வழங்கி அவர்களின் உடல்நிலையை  விசாரித்து ஆறுதல் கூறினர். திருவெற்றியூரில் உள்ள ஆகாஷ் மருத்துவமனை சென்று மருத்துவரிடம் இச்சம்பவத்தால் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை கேட்டறிந்தனர்.

இவர்களுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர்கள் எஸ்.ஜீவராஜ், எஸ்.ஸ்ரீனிவாசகம் கலந்து கொண்டனர்.