‘கலைஞரின் சமூகநீதிப் பாதையில் எல்லார்க்கும் எல்லாம் என்பதை வென்றெடுத்திடுவோம்’ - கனிமொழி எம்.பி.

 
 ‘கலைஞரின் சமூகநீதிப் பாதையில் எல்லார்க்கும் எல்லாம் என்பதை வென்றெடுத்திடுவோம்’ - கனிமொழி எம்.பி.  ‘கலைஞரின் சமூகநீதிப் பாதையில் எல்லார்க்கும் எல்லாம் என்பதை வென்றெடுத்திடுவோம்’ - கனிமொழி எம்.பி.

சமூகநீதிப் பாதையில் எல்லார்க்கும் எல்லாம் என்பதை வென்றெடுத்திடுவோம் என கலைஞரின் நினைவு நாளையிட்டி திமுக எம்.பி., கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.  

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எழுதும் பேனாவில் தொடங்கி, வாசிக்கும் புத்தகம், முழக்கமிடும் போராட்டக் களம், உரை நிகழ்த்தும் நாடாளுமன்றம், தினம் எதிர்ப்படும் மக்கள் என எங்கு காணினும் தென்படும் உங்கள் முகமே! 

kanimozhi

கருத்தாய், கண்மணியாய், கொள்கைக் குன்றாய், வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய், நீங்காத நிழலாய், நெஞ்சுக்கு நிகரான உயிராய், உயிரினும் மேலான தலைவராய் எங்களுள் நீக்கமற நிறைந்து நிற்கும் முத்தமிழறிஞரே நீங்கள் காட்டிய சமூகநீதிப் பாதையில் ஆயிரம் ஆயிரமாய் அணிவகுத்திடுவோம்! எல்லார்க்கும் எல்லாம் என்பதை வென்றெடுத்திடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.