தமிழ்நாட்டில் வறண்ட வானிலை - வெப்பநிலை குறையும் என தகவல்!!

 
weather

இன்று முதல் வருகிற 24-ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் தெளிவாகவும் காணப்படும். உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வானம் தெளிவாக காணப்படும்.

rain

இன்று மற்றும் நாளை உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும். கடலோர மாவட்டங்களில் குறைந்த பட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாக காணப்படும்.

rain

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் பகல் மற்றும் இரவு நேரங்களில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.  கடந்த  24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.  இன்று குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.