சென்னை வேளச்சேரியில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்!
சென்னை வேளச்சேரியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இரண்டாவது வாரமாக களைகட்டியது.
சென்னை வேளச்சேரியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இரண்டாவது வாரமாக நடைபெற்றது. வேளச்சேரி நங்கநல்லூர் சாலையில் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி காரணமாக காலை 6 மணி முதல் 9 மணி வரை மொத்தம் 3 மணி நேரம் வேளச்சேரி பகுதியில் போக்குவரத்து மாற்றமும் கடந்த வாரம் போல செய்யப்பட்டது. பாட்டு மற்றும் நடனம் இந்த ஹாப்பி ஸ்டில்ஸ் நிகழ்ச்சியின் முக்கியமான பங்காக இருக்கிறது. தொடர்ந்து நடைபெறுவதைப் போல இந்த வாரமும் இளைஞர்கள் மட்டுமின்றி முதியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடனமாடிக் கொண்டாடினர். மேலும் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விளையாடும் வகையில் ஷட்டில், பாஸ்கெட் பால்,டேபிள் டென்னிஸ், ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டுகளும் இங்கு நடைபெற்றது.
#JUSTIN வேளச்சேரியில் 2ஆவது வாரமாக "ஹேப்பி ஸ்ட்ரீட்" நிகழ்ச்சி#HappyStreet #Chennai #News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/bkWDilLWzE
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 18, 2024
+-பரபரப்பான சூழலில் ஞாயிறு விடுமுறையை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சாலை விபத்துகளைக் குறைக்க, வாகன ஓட்டிகளிடையே சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் விபத்தில்லா தினம் என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை தொடங்கி நடத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் வரும் 26 ஆம் தேதி விபத்து ஒழிப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஜீரோ இஸ் குட் என்ற தொப்பி வழங்கியும், காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பாட்டு, நடனம் என நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் பாடி ஆடி மகிழ்ந்தனர். ஊரகப் பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்கள் போல சென்னையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறுகிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியானது என்றும் வரவேற்கத்தக்கது என பொதுமக்கள் கூறினர். மேலும் வார நாட்களில் தொடரும் வேலைப்பளுவிற்கு இடையே தங்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் மனதிற்கு அமைதியையும் புத்துணர்ச்சியும் தருவதோடு மகிழ்ச்சியையும் தருவதாக தெரிவித்தனர்.