இனிமே எடை குறைவு பிரச்சனை இருக்காது..! பாக்கெட்களில் ரேஷன் பொருட்கள் வழங்க திட்டம்

 
Ration Shop Ration Shop

ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகிக்கும் திட்டம்  சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. வெளிக்கடைகளில் உள்ள விலையை விட குறைந்த விலையில் ரேஷனில் பொருட்கள்  விநியோகம் செய்யப்படுவதால் மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி ரேஷனில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பாமாயில் ஒரு பாக்கெட் ரூ.25க்கும், துவரம் பருப்பு ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

Ration Shop

இருப்பினும், நீண்ட காலமாக ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்கள்  எடை குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.  அதனை சரிசெய்யும் வகையில், ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

அதனை மேலும் அதிகரிக்கும் வகையில் தொகுதிக்கு ஒரு ரேஷன் கடை என தேர்வு செய்யப்பட்டு சோதனை அடிப்படையில் 234 ரேஷன் கடைகளில் பொருட்களை பாக்கெட் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் வரவேற்பை பொருத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் திட்டத்தை விரிவுப்படுத்த உணவுப்பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது.