மேற்கு வங்க சட்டசபையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

 
1

 மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 15 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., 80 தொகுதிகளை மட்டுமே வென்றது.

எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ., 207 தொகுதிகளை பெற்று, பெரும்பான்மை பலத்துடன் நாளை ஆட்சி அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. எனினும், முறைகேடான இந்த தேர்தல் முடிவை ஏற்காத மம்தா, முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என போர்க்கொடி துாக்கினார். இந்நிலையில், அவரது அரசின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. வழக்கமான நடைமுறையின்படி, சட்டசபை பதவிக்காலம் முடிவடைந்த பின்னரோ, பெரும்பான்மை ஆதரவை இழந்த பின்னரோ, முதல்வர் பதவியில் இருக்கும் நபர் தன் ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

எனினும், தற்போதைய சூழலில் மம்தா பானர்ஜி முறையாக பதவியிலிருந்து விலகும் முன், சட்டசபை நேற்று கலைக்கப்பட்டது. அரசியலமைப்பின் 174(2)(பி) பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கவர்னர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம், மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் புதிய அரசு அமைக்கும் தகுதி கொண்ட கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பதற்கு, கவர்னரின் இந்த முடிவு வழிவகுக்கக்கூடும் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.