தமிழகத்தை தொடர்ந்து மேற்குவங்க கவர்னர் மாளிகை பெயர் மாற்றம்..!
ஆளுநர் மாளிகைகள் 'ராஜ்பவன்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் தலைமையேற்ற நமது ஆளுநர் R.N.ரவி 'ராஜ்பவன்' என்பது 'மக்கள் பவன்' என மாற்ற வேண்டும் கோரிக்கை வைத்தார். அதை அனைவரும் வரவேற்ற நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகமும் அதை ஏற்று அதிகாரபூர்வமாக 'ராஜ்பவன்' என்பதை இனி 'மக்கள் பவன்' என அனைத்து மாநிலங்களும் மாற்றி அழைக்க உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய பிரேதங்களில் உள்ள ஆளுநர் மாளிகைகள் லோக் நிவாஸ் என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க கவர்னர் மாளிகையான ராஜ்பவன், 'லோக் பவன்' (மக்களின் மாளிகை) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் வேறு பகுதிகளில் அமைந்துள்ள கவர்னரின் இல்லங்கள் அனைத்தும் லோக் நிவாஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கவர்னர் மாளிகை பொதுமக்கள் அணுகக்கூடியதாகவும், 'மக்களின் ஆளுகை'க்கு அடையாளமாகவும் மாற்றும் தேசிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பெயர் மாற்றம் அமைந்துள்ளது.
கடந்த நவம்பர் 25, அன்று உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ராஜ்பவன்கள் 'லோக் பவன்' என்றும், ராஜ் நிவாஸ் 'லோக் நிவாஸ்' என்றும் ஒரே மாதிரியாகப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற நோக்கத்தின் கீழ் ஜனநாயக அமைப்புகளில் மக்களின் பங்கேற்பை வலியுறுத்துவதே இந்தப் பெயர் மாற்றத்தின் நோக்கம் என்று மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


