பணத்திற்காக செய்த கேவலமான செயல்..! சிறுமியின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த டாட்டூ கலைஞர்..!
Sep 17, 2025, 13:06 IST1758094589941
டாட்டூ கலைஞராக இருப்பவன் பாலக்காட்டை சேர்ந்தவர் பிபின் (28 வயது).
இவனுக்கும் 15 வயது சிறுமிக்கும் இடையே சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுமி தனது புகைப்படங்களை பிபினுடன் பகிர்ந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பிபின், 15 வயது சிறுமியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்கள் மூலம் பலருக்கு அனுப்பி பணம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாலக்காடு தெற்கு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, எர்ணாகுளத்தில் வைத்து பிபினை போலீசார் கைது செய்தனர். அவர் ஏற்கனவே சிறுமிகளை ஏமாற்றியதாக கோழிக்கோடு போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


