திமுகவில் போட்டியிட தேவையான தகுதிகள் என்ன? - பிரதமர் மோடி பரப்புரை

 
modi

திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

tn

வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக என்பது குடும்ப நிறுவனத்தைப் போன்றது; திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை. தமிழக கலாச்சாரத்திற்கு எதிராக திமுக செயல்படுகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸும் திமுகவும்தான்; கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கையில் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியிருக்கிறேன்.

tn

திமுக ஆட்சியில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகமாகியிருப்பது வேதனையளிக்கிறது.  பள்ளிக்கூடங்களுக்கு அருகில் கூட போதைப்பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. திமுக தமிழ்நாடு மக்களை மொழியின் பெயரால் பிரித்து ஆள்வதே திமுகவின் முக்கிய அரசியல் குறிக்கோள்; மதம் மாற்று ஜாதியின் பெயரால் பிரிவினை செய்கிறார்கள். திமுகவில் போட்டியிட தேவையான தகுதிகள் என்ன?" "திமுக சார்பில் போட்டியிட 3 தகுதிகள் தேவை. 1. குடும்ப பின்னணி, 2.ஊழல், 3.தமிழ் கலாசாரத்திற்கு எதிரான மனநிலை என்றார்.