CM-ஆக விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?

 
tvk

தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர் விஜய், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரலாம்.

Vijay tvk

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவில் முன்னிலை வகித்து வருவது அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.கூட்டணி ஆதரவு இல்லாமல் தனியாக களமிறங்கிய இந்த கட்சி, 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் தவெக 22.54% வாக்குகளை பெற்றுள்ளது. எண்ணப்பட்ட 2.88 கோடி வாக்குகளில் 1 கோடிக்கும் மேல் வாக்குகளை பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. 

இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர் விஜய், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரலாம். ஆட்சியமைக்க ஆளுநர் அனுமதி அளித்தவுடன் மெஜாரிட்டியை நிரூபிக்க காலக்கெடு விதிக்கப்படும். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். மெஜாரிட்டிக்காக தவெக மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோர வேண்டும்.