"அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?" - செந்தில் பாலாஜியை வம்புக்கு இழுத்த அண்ணாமலை!

 
1

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில்,  திமுக கூட்டத்தில், கோவை மக்கள், பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள் என்று அவமரியாதையாகப் பேசிய  தயாநிதி மாறனுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.அதைக் கேட்டு முன்னாள் சாராய அமைச்சர் . செந்தில் பாலாஜி. சிரித்துக் கொண்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் மக்கள், பண்பானவர்கள். மரியாதை மிக்கவர்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களையும் போல, கோயம்புத்தூர் மக்களும், தங்கள் கடின உழைப்பால், தமிழகத்துக்கும், நாட்டிற்கும் தங்கள் பொருளாதார பங்களிப்பை அளித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

திமுகவினர் தவிர மற்ற தமிழக மக்கள் யாருமே, தமிழகத்தைச் சுரண்டிக் கொழுக்க நினைப்பதில்லை. கோபாலபுரக் குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் தயாநிதி மாறனுக்கே இத்தனை ஆணவம் இருந்தால், தங்கள் கடும் உழைப்பினால் தமிழகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் மக்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

தனது திமிர்த்தனமான பேச்சுக்கு, தயாநிதி மாறன் உடனடியாக கோயம்புத்தூர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். திமுகவினரின் இந்த ஆணவத்தால்தான், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதி மக்களும், திமுகவைப் புறக்கணித்து வருகிறார்கள். வரும் தேர்தலில், தமிழகம் முழுவதுமே திமுகவுக்கு அதே நிலைதான் ஏற்படும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.