விமானத்தில் உள்ள 141 பேரின் கதி என்ன?
Oct 11, 2024, 19:59 IST1728656946613
திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு மாலை 5.40க்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் திருச்சியில் தரையிறக்க விமானிகள் முயற்சிக்கின்றனர். ஆனால் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வானத்திலேயே வட்டமிட்டுவருகின்றன.
விமானத்தை தரையிறக்க முடியாமல் தவிக்கும் விமானிகள்.. நடந்தது என்ன?
▶️ விமானம் பறக்கத் தொடங்கியவுடன் சக்கரங்களை உள் இழுக்க முடியாமல் தொழில்நுட்பக் கோளாறு
▶️ விமானத்தை இன்னும் 10 நிமிடங்களில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது
▶️ தீப்பற்றுவதை தவிர்க்க எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்க திட்டம்
▶️ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன
▶️ திருச்சி விமான நிலையத்திற்கு மருத்துவக் குழு விரைகிறது