பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்னாகும்? - சென்னை உயர்நீதிமன்றம்

 
tn

இசையமைப்பாளர் இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ  மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன.  ஆனால் இந்த ஒப்பந்தம் கடந்த 2014 ஆம் ஆண்டுடன் முடிந்த நிலையில் காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக இரு  நிறுவனங்களின் மீதும் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும் , இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் உத்தரவிட்டார்.  இந்த உத்தரவை  எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு  செய்தார்.

gb

 இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது.  அத்துடன் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்கால தடை விதித்தது.  இந்த உத்தரவை எதிர்த்து எக்கோ நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்றுள்ளோம் என்றும் அதன் அடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தது.  

high court

இந்நிலையில் இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களின் காப்புரிமை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்துதான் பாடல் உருவாகிறது ; வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை . "வரிகள், பாடகர் என அனைத்தும் சேர்ந்து தான் பாடல் என்பதால்  பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என்று இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

ilaiyaraja-22

பாடல்கள்  விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று கூறிய நீதிமன்றம் வழக்கின் விசாரணையை  ஜூன் 2வது வாரத்திற்கு தள்ளிவைத்தது.