பொங்கல் வைக்க உகந்த நேரம் எது..? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!
தமிழர் திருநாள்,தைத் திருநாள், அறுவடை நாள் என்று சாதி, மத பேதமின்றி விவசாயிகளை போற்றும் பண்டிகையாக இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை நாளில் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை கீழே விரிவாக காணலாம்.
பொங்கல் திருநாள்:
தைத் திருநாளான பொங்கல் நாளில் காலை 10.30 மணி முதல் 11 மணி வரை நல்ல நேரம். மதியம் 1 மணி முதல் 1.30 மணி வரை நல்ல நேரம் ஆகும். இந்த நேரத்தில் பொங்கல் வைப்பது சிறப்பாகும். இல்லாவிட்டால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பொங்கல் வைத்து சூரிய உதயத்தில் பொங்கல் பொங்கினால் மிகவும் சிறப்பாகும். மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை ராகு காலம். மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை எமகண்டம். இந்த நேரத்தில் கட்டாயம் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
மாட்டுப் பொங்கல்:
தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மாட்டுப் பொங்கல் பண்டிகையே கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலான வரும் 16ம் தேதி காலை 9.30 மணி முதல் காலை 10.3 மணி வரை நல்ல நேரம் ஆகும். மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை நல்ல நேரம் ஆகும். இந்த நேரத்தில் பொங்கல் வைப்பது மிகவும் சிறப்பாகும். ராகு காலம் காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை வருகிறது. எமகண்டம் மதியம் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை வருகிறது. இந்த நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும். பொதுவாக பொங்கல் பண்டிகை நாட்களில் மதியம் 1 மணிக்குள் பொங்கல் வைப்பது நல்லது ஆகும்.


