பார்ப்பன மதம் என்றால் என்ன? பார்ப்பனன் என்று கூறுவது தவறா?

 
u

பார்ப்பன மதத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது என்று சொன்ன  தி.க., இஸ்லாமியருக்கு எதிராக கொதித்தெழுந்திருக்கிறார்   தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயனன் திருப்பதி.

'பார்ப்பன மதத்தில்' உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததாக திராவிடர் கழக கொள்கையுடைய ஒரு இடையீட்டாளரும், இஸ்லாமியர் ஒருவரும் பங்கேற்ற ஒரு 'யூ டியூப்' பேட்டியை பார்க்க நேர்ந்தது என்று சொல்லும் நாராயணன் திருப்பதி,   உடன் அந்த இடையீட்டாளரை தொடர்பு கொண்டு 'பார்ப்பன மதம்' என்றால் என்ன என்று வினவினேன். அதற்கு பதில் இல்லை அவரிடம். ஆனால் நான் கேட்ட கேள்வியை தவிர்த்து, பாரதியே பதிவிட்டுள்ளார், 'பார்ப்பனன்' என்று கூறுவது தவறா? என்று கேள்வி எழுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உட்

அவர் மேலும்,  பாரதியார் பார்ப்பனன் என்றும் அழைத்தார், துலுக்கன் என்றும் அழைத்தார். ஆனால், இப்போது  'துலுக்கன்' என்று கூறுவது தவறு என்றால் 'பார்ப்பனன்' என்று கூறுவதும்  தவறு என்றேன். அவரிடம் பதிலில்லை. துலுக்கன் என்று அழைப்பதை அவர்கள் விரும்பவில்லை என்றார். அதே தானே பார்ப்பனர்களுக்கும் பொருந்தும்? என்றேன். பதிலில்லை என்கிறார்.

இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து நாராயணன் திருப்பதி அளித்திருக்கும் விளக்கத்தில்,  ரிக்வேதம் பத்தாவது மண்டலம் பதினெட்டாவது அத்தியாயம் இவ்வாறு சொல்கிறது (10.18). இறந்த மனிதனின் சகோதரர்களும் மற்ற உறவினர்களும் அவன் மனைவிக்கு சொன்னது :
‘ ஓ, பெண்ணே உன் கணவனை தகனம் செய்ய அனுமதிப்பாயாக. வாழும் உன் குடும்பத்தாரிடம் செல்வாயாக.உன் பிள்ளைகள் உன் பேரப்பிள்ளைகள் போன்றவர்கள் இருக்கும் உன் வீட்டிற்கு செல்வாயாக. உனது எஞ்சிய வாழ்நாளை மகிழ்ச்சியாக கழிப்பாய்.நீ யாரருகில் துயின்றாயோ யார் உன் கையைமணமேடையில் பற்றினானோ அவன் இன்று சலனமின்றி இருக்கிறான்.’

ட்ர்

இன்னொன்றும் சொல்கிறது  வேதம் – விதவைகளுக்கு மறுமணம் உண்டு என்கிறது. இறந்த பெண்ணின் கணவனின் வில்லை எடுத்து கொண்டு இந்த பெண்ணை மணம் செய்ய முடிவுசெய்துள்ளவன் சொல்வது போன்ற ஒரு சுலோகத்தை இவ்வாறு கூறுகிறது ... 

‘பெண்ணே இதோ சிதையில் இருக்கும் இவன் வில்லை நான் எடுத்து கொண்டேன். இது எனக்கு புகழையும், வலிமையையும், சக்தியையும் அளிக்கட்டும். இங்கு இருக்கும் இந்த உயர்ந்த மனிதர்களுடன் இணைந்து நம்மை எதிர்ப்பவர்களை நாம் வெல்வோம்.’
‘பெண்ணே இறந்த உனது கணவனிடமிருந்து நீங்குவாயாக. உன் கைப்பற்ற தயாராய்இருக்கும் இந்த ஆடவனை சேர்ந்து பிள்ளைகளும் செல்வமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வாயாக” என்று அந்த விதவையை வாழ்த்துகிறது இன்னொரு சுலோகம் என்கிறார்.

ன்

மேலும் அவர் அளித்துள்ள விளக்கத்தில்,  முகலாயர்களின் படையெடுப்பையடுத்து, வீழ்ந்த சாம்ராஜ்யங்களின் வீரர்கள் கொல்லப்பட்டு,அவர்களின் மனைவிகள், சகோதரிகள்,பெண் குழந்தைகள்  வன்கொடுமையும் பாலியல் வல்லுறவும் செய்யப்பட்டதால் தங்களின் மானத்தை காத்துக்கொள்ள தீயில் வீழ்ந்து உயிரை மாய்த்து கொண்டனர்.  ஒரே இடத்தில்  ஆயிரக்கணக்காண பெண்கள் தீயில் வீழ்ந்த சம்பவங்கள் நெஞ்சை உலுக்கும் சோகங்கள் என்கிறார்.

 உடன் கட்டை ஏறும் வழக்கம் ஏன் வந்தது என்பது தெளிவு. தென்னிந்தியாவில் முகலாயர்களின் படையெடுப்பு  அதிகமில்லாததால், அதன் தாக்கம் இங்கில்லை. ஆனால், இதை உணராத சில சிறுமதியாளர்கள், சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம், வேதங்களில் சொல்லப்பட்டதாக தவறான பதிவுகளை செய்து, பிராமணர்களே இதை செய்ய தூண்டினர் என்ற பொய்யுரைப்பது முழுக்க முழுக்க குரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்கிறார். 

குறிப்பு : உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்த ராஜா ராம் மோகன் ராய் ஒரு  பிராமணரே என்று  சொல்லும் நாராயணன் திருப்பதி, உண்மையை உணர்வோம். புறந்தள்ளுவோம் ஹிந்து விரோதிகளை என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.