இனிமே என்ன மரியாதை..தனுஷை டார் டாராக கிழித்த பிரபலம்..!

 
1

18 ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் மனம் ஒத்துப் பிரிவதாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தனர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர். 

பிரச்னைகள் தீர்ந்து விரைவில் இருவரும் மீண்டும் வாழ்க்கையில் இணைவார்கள் என்று தான் எதிர்பார்த்திருந்தனர், ஆனால் திடீரென சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த விவாகரத்து வழக்கை ஏற்றுக் கொண்ட குடும்ப நல நீதிமன்றம், வரும் அக்டோபர் 7ஆம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் மீது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல்வேறு குறைகளை கண்ட பிறகு இந்த ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. அதாவது தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் தனுஷ், மிக நெருக்கமாக பழகுவது ஐஸ்வர்யாவின் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது.

தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடியின் இந்த அறிவிப்பு அவர்களது குடும்பத்தினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் பொருட்டு இருவீட்டாரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததால் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.

இப்போது திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் அதே விஷயத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதில் அவர், பல பெண்களுடன் தனுஷ் தொடர்பில் இருந்தார் என்பதை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இதுவரை நாகரிகம் கருதி இதைப் பற்றி பேசாமல் இருந்ததாகவும், கோர்ட் வரைக்கும் சென்ற பிறகு, இதைப்பற்றி பேசாமல் இருப்பது சரியில்லை என்றும், அவர் குறிப்பிட்டு தனுஷ் மீது தனது குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார்.

இதுகுறித்து வீடியோ ஒன்றில் தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியிருப்பதாவது,கேடு விளைவிக்க பார்க்கறியா தனுஷ்? அப்படி என்ன ஒரு வாழ்க்கை பல பெண்களுடன் உனக்கு? ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதுதான் தமிழ் பண்பாடு. நான் இதுவரைக்கும் நேரடியாக எதுவும் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் என் மனசு ஒத்துக்கவில்லை.கோர்ட் வரைக்கும் போயிட்ட பிறகு உங்ககிட்ட என்ன நாகரிகமாக பேசறது? தயவு செய்து தமிழ்நாடு, தமிழ் பண்பாடு, தமிழர்களுக்கு பிறந்தவர்கள் என்ற நல்ல மனசு உங்களுக்கு இருந்தால், அந்த பண்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால், மக்களின் சாபத்தை பெறக்கூடாது என்றால் இருவரும் சேர்ந்து வாழுங்கள்.

குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொடுங்கள். குழந்தைகளை காப்பாற்றி அவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைத்து, மகிழ்ச்சி வாழ வையுங்கள். வாழ்த்தி வாழுங்கள். அந்த குழந்தைகளும் வாழ்த்துவார்கள் என்று அந்த வீடியோவில் தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியிருக்கிறார்.