தமிழக தேர்தல் எப்போது? தேர்தல் நடைபெறும் தேதி இதுதான்!

 
election

 2026ல் தேர்தல் நடைபெற இருக்கும் 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையமும் ஒவ்வொரு மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடைத்து வருகின்றனர். கடந்த மாதம் இறுதியில் கூட புதுச்சேரியில் தேர்தல் தொடர்பான ஆலோசனையை மேற்கொண்டுவிட்டு தமிழகத்திற்கு ஆலோசனை செய்ய சென்னை வந்தார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார். வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்காளர்கள் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாக கூறப்பட்டது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தும் கருத்துக்களை கேட்டறிந்துள்ளார். 

இருப்பினும் இதுவரை தேர்தல் நடைபெறும் தேதி குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடுபகுதியில் நடைபெறலாம் என பேசப்பட்டும் வருகிறது. இதன் காரணமாக சட்டமன்ற தேர்தல் எப்போது நடைபெறும் என்ற கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரம் மாதம் 23ஆம் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரே கட்டமாக தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தேர்தலின் வாக்குப்பதிவு நடந்ததில் இருந்து இரண்டு நாட்களில் ரிசல்ட் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கும். அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும். மேலும், தற்போது தமிழகத்தை ஆளும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பதவிக்காலம் மே 10ஆம் தேதியுடன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.