அஜித்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? - அன்புமணி கேள்வி..!!

 
அஜீத்குமாரை சித்திரவதைச்  செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? அஜீத்குமாரை சித்திரவதைச்  செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?

திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை சித்திரவதைச்  செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? என  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.  

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்  என்ற இளைஞர்.  கடந்த ஜூன் 27 அன்று இந்தக் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73) , அவரது மகள் நிக்கிதாவின் காரில் வைக்கப்பட்டிந்த 10 சவரன் நகைகள் காணாமல் போனது.  இதுதொடர்பான புகாரின்பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார். 

அஜீத்குமாரை சித்திரவதைச்  செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொலை வழக்காக மாற்றப்பட்டு திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை  எஸ்.பி., ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  தொடர்ந்து மானாமதுரை டி.எஸ்.பி.யும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.   இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில்,  தனிப்படை போலீஸார் கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்து, அஜித்தை தாக்கும் வீடியோ காண்போரை கலங்கச் செய்கிறது. அஜித்தை பி.வி.சி.பைப் மற்றும் இரும்புக் கமியால் சரமாரியாக தாக்கினர். 

அந்த வீடியோவில் இருந்த காவலர்கள் யாரும் சீருடை அணிந்திருக்கவில்லை. கலர் சட்டை, டி-சர்ட், லுங்கி என சாதாரன உடையில் இருந்தனர். செருப்புக் காலுடன் அஜித்தை கடுமையாக உதைத்துள்ளனர்.  நிக்கிதாவின் நெருங்கிய உறவினரான சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கொடுத்த அழுத்தத்தின் பேரிலேயே, எஃப்.ஐ.ஆர் கூட போடாமல் அஜித்தை அடித்து உதைத்து விசாரித்ததாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.  இந்த நிலையில் யார் அந்த உயர் அதிகாரி என அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

MK Stalin

அந்தவகையில் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில், “அஜீத்குமாரை சித்திரவதைச்  செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனத்தில்  காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை  சித்திரவதை செய்யும்படி,  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத்  தொடர்பு  கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விட்டாலும்  தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.