யார் சொல்வது உண்மை.. நடிகர் நகுல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ..!

 
யார் சொல்வது உண்மை.. நடிகர் நகுல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ..!

தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வல்லினம்,  வாஸ்கோடாகாமா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்  நடிகர் நகுல்.  நடிகை தேவயாணியின் சகோதருமான நகுல்,  சமீபத்தில் வாஸ்கோடகாமா என்ற படத்தில் கதா நாயகனாக நடித்தார்.  இந்தத் திரைப்படத்தின் அலுவலக பணியாளராக பணியாற்றிய சந்துரு என்பவர்,  தன்னைப் பற்றியும் இயக்குனர் ஆர்.ஜி.கே மற்றும் உடன் பணியாற்றிய நடிகைகள் அர்த்தனா மற்றும் சுனைனா  குறித்தும் அவதூறாக சமூக வலைத்தளங்களில் பேட்டி அளித்திருப்பதாகவும், இது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக புகாரில் நகுல் தெரிவித்துள்ளார். உடனடியாக சந்துரு மீது நடவடிக்கை எடுத்து அந்த காணொளியை நீக்க வேண்டும் என நடிகர் நகுல் தரப்பில்,  நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார். 

யார் சொல்வது உண்மை.. நடிகர் நகுல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ..!

முன்னதாக சமூக ஊடகங்களிக்கு வாஸ்கோடாகாமா திரைப்படத்தின் அலுவலக பணியாளார் சந்துரு அளித்துள்ள பேட்டியில், நள்ளிரவில் நடிகர் நகுல்  3 ஆணுறைகள் வாங்கி  வரச்சொல்லி தன்னை வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததற்காக இயக்குநர் ஆர்.ஜி.கே- விடம் தன்னைப்பற்றி தவறாக தெரிவித்துவிட்டதாகவும்  தெரிவித்திருக்கிறார். அத்துடன் வாஸ்கோடாகாமா படத்தில் வேறு நடிகைகள் நடிக்க வேண்டியிருந்ததாகவும்,  ஆனால் அவர்கள் அட்ஜெஸ்மெண்டுக்கு ஒத்துவர மாட்டார்கள் என்பதால் நடிகைகள் மாற்றப்பட்டதாகவும் சந்துரு கூறியுள்ளார். மேலும், இயக்குநர் ஆர்.ஜி.கேவும் இதற்கு தொடர்பு இருப்பதாகவும், 2 ஆண்டுகளாக பணியாற்றிய தமக்கு ஊதியம் வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.