குப்பை பொறுக்கும் சிறார்கள் - கண்டுகொள்ளுமா கல்வித்துறை?

 
vanathi srinivasan

பள்ளிக்கல்வித்துறைக்கென ரூ. 40,299  கோடிகள் ஒதுக்கப்பட்டும், அரசு பள்ளிகளும், கல்வித்துறையும் தங்கள் கடமையை சரிவர செய்யாதது ஏன்? என்று எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Vanathi seenivasan

இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் , கோவையின் பல்வேறு பகுதிகளில் அழுக்கு படிந்த ஆடைகளுடனும், பேச்சில், செயலில்  ஒழுக்கத்தின் வாசமே இல்லாமலும், போதை பொருட்களுக்கு அடிமையாகிவிடும் அபாயத்தோடும், சமூக சீர்கேடுகளுக்கு ஆளாகிவிடுவார்களோடு எனும் அச்சத்தை ஏற்படுத்தும் பழக்கங்களோடும், கல்வியையும், எதிர்காலத்தையும் தொலைத்து குப்பைகூளங்கள் தோரும் சுற்றித்திரியும் சிறார்களை பார்க்க முடிகிறது! அவர்களின் எதிர்காலம் என்னவாகுமோ எனும் அச்சத்தையும், கேள்வியையும் ஏற்படுத்துகிறது. 

குழந்தைகளின் எதிர்காலத்தை டாஸ்மாக் கடைகளில் அடகு வைத்துவிட்ட அப்பாக்களும், அன்றாடம் பிழைப்புக்கு அல்லற்படும் அம்மாக்களும், செயலற்று போன கல்வித்துறையும், மக்கள் நலனில் துளியும் அக்கறையே இல்லாமல் மது விற்ற வருமானத்தில் ஆட்சி நடத்தும் அரசாங்கமும் எப்போது உணரப்போகிறது, குப்பை பொறுக்குவது சிறார்கள் அல்ல, வளர வேண்டிய ஒரு தலைமுறையும், தமிழகத்தின் எதிர்காலமும்  என்று! 


ஒரு தலைமுறையையே மாற்றும் சக்தி கல்விக்கு உண்டெனில், இது போன்ற சிறார்களை கல்வித்துறையும், அரசாங்கமும் கண்டுகொள்ளாதது ஏன்? இந்த நிதியாண்டில் (2023-24) பள்ளிக்கல்வித்துறைக்கென ரூ. 40,299  கோடிகள் ஒதுக்கப்பட்டும், அரசு பள்ளிகளும், கல்வித்துறையும் தங்கள் கடமையை சரிவர செய்யாதது ஏன்? இனியாவது கல்வித்துறை கண்விழிக்க வேண்டும்! அரசு தம் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! வளமான இளையசமூதாயம் அமைவதில் பெற்றோர்களுக்கு இருக்கும் கடமையையும் அரசு உணர்த்த வேண்டும்!  இனி வரும் காலங்கள் இது போன்ற சிறார்கள் இல்லாத நிலை உருவாக்க வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.