ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் பொம்மன் இலச்சினை ஏன்? - அமைச்சர் உதயநிதி ட்வீட்..

 
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் பொம்மன் இலச்சினை ஏன்? - அமைச்சர் உதயநிதி ட்வீட்..


ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் பொம்மன் இலச்சினை பயன்படுத்தப்பட்டது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.  

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.  நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 4-0 என்கிற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த ஹாக்கி போட்டியின் இலச்சினையாக வடிவமைக்கப்பட்டுள்ள  "பொம்மன்" எனும் யானையின் சின்னம்  அனைவரிடமும்  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில்   இந்த இலச்சினை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் பொம்மன் இலச்சினை ஏன்? - அமைச்சர் உதயநிதி ட்வீட்..

அவர் தனது பதிவில், “முதுமலை புலிகள் காப்பகத்தில் கைவிடப்பட்ட யானைக் குட்டிகளை தத்தெடுத்து பராமரித்து வரும் பொம்மன் - பெல்லி தம்பதியினரை பெருமைப்படுத்தும் விதமாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இலச்சினைக்கு "பொம்மன்" என பெயர் சூட்டினோம். இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியை காண, மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்திற்கு வந்திருந்த பொம்மன் - பெல்லி தம்பதியினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர்களின் தன்னலமற்ற பணிகள் தொடர வாழ்த்தி மகிழ்ந்தோம்” என்று  தெரிவித்துள்ளார்.