ஏன் சனிக்கிழமை மட்டும் பிரச்சாரம்.. காரணம் இது தான்...

 
1 1

இன்று நாகையில் புத்தூர் ரவுண்டானா பகுதியில் பரப்புரை செய்ய விஜய் திட்டமிட்டு இருந்தார். ஆனால் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி காவல்துறை அங்கு அனுமதி மறுத்தது. இதற்குப் பதிலாக அண்ணா சிலை அருகே பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திருவாரூரிலும் விஜய் இன்று தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளிலும் தவெக தொண்டர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கு அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாகப் பிரச்சார இடத்திற்கு வருகை தர உள்ளார்.மேலும் நாகையில் பரப்புரை மேற்கொள்ள இருக்கும் தவெக தலைவர் விஜய காணப் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

கடந்த முறை பரப்புரைக்கு விஜய் வந்த வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த முறை திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த வாரம் திருச்சியில் நடந்த விஜயின் பரப்புரையில் மைக் வேலை செய்யாததால் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்தச் சிக்கல்கள் மீண்டும் வராமல் தடுக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒலித்தொடர்பு வசதிக்காக Wi-Fi ஆடியோ கனெக்ஷன் வழங்கப்பட்டதோடு, தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் மூலம் ஒலி அமைப்புகள் மேற்பார்வை செய்யப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

தவெக தலைவர் விஜய், பிரசார பயணத் திட்டம் சனிக்கிழமைகளில் திட்டமிடப்பட்டது ஏன் என்பது குறித்து இன்று நாகையில் பேசும்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

கடந்த வாரம் பிரசாரத்தின்போது பெரம்பலூர் செல்ல வேண்டியது. ஆனால், செல்ல முடியாமல், போனது. இந்த நேரத்தில் பெரம்பலூர் பகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நாம் இந்த பிரசார திட்டத்தைப் போட்ட பிறகு, அது என்னப்பா சனிக்கிழமை, சனிக்கிழமை என கேள்வி எழுந்தது. அது ஒன்றும் இல்லை. உங்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படக் கூடாது, உங்களது எந்த வேலைக்கும் தொந்தரவு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே வாரயிறுதி நாள்களில் திட்டமிடப்பட்டது.