தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உசிலம்பட்டியில் முதல்வர் விஜய் தொடங்கி வைப்பது ஏன்?
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்று தமிழக வெற்றிக்கழகம் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து ஆட்சி பொறுப்பு ஏற்ற நிலையில் தமிழக வெற்றிக்கழக அரசு இத்திட்டத்துக்காக 755 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. மேலும் இந்த திட்டத்தைசெப்டம்பரில் தொடங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது இந்த நிலையில் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். தாய் மாமன் திட்டத்தை ஏன் உசிலம்பட்டியில் தொடங்கி வைக்கிறார் என்றால் உசிலம்பட்டி சுற்றுவட்டாரத்தில் மட்டுமே தாய் மாமன்கள் சீர் என்பது இன்றைய காலகட்ட வரையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தனது சகோதரி திருமணம், குழந்தை பிறப்பு என ஒவ்வொரு காலகட்டத்திலும் அனைத்து சீர்களையும் இன்றளவும் உசிலம்பட்டி தாய் மாமன்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். இதனாலேயே தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் இங்கு தொடங்கி வைக்கப்படுவதாக முதல்வர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தனர்

