சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தயங்குவது ஏன்? செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கேள்வி

 
tn

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தயங்குவது ஏன்?  என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

Central Govt

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் மக்கள் தொகையில் சாதிவாரியான மக்களின் வருமானம், கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு பிரிவினர்களின் சமூக பற்றிய சரியான விவரங்களை பெற முடியும். இந்த கணக்கெடுப்பு புதிய சமூகநீதி திட்டத்திற்கு அடித்தளமாக அமைகிறது.



இந்நிலையில் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டில் வெறுப்புணர்வைத் தூண்டும் அரசியலிலும். சமூகத்தில் அச்ச சூழலை ஏற்படுத்துவதிலும் பாஜக ஈடுபடுவது ஏன்?

நாட்டில் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தயங்குவது ஏன்? " என்று குறிப்பிட்டுள்ளார்.