பசும்பொன் விழாவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்காதது ஏன்?

 
ops eps

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114வது ஜெயந்தி மற்றும் 59 குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. பசும்பொன்னில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்றுக் கொண்டார். காலை 9 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ops eps

அதற்கு முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்த அவர், சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த தேவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தெப்பக் குளத்தில் உள்ள மருது சகோதரர் சிலைக்கும் அஞ்சலி செலுத்தினார். திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பசும்பொன் விழாவில் பங்கேற்கவில்லை. அவர்கள் விழாவை புறக்கணித்து விட்டதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகின. 

அதிமுகவை சேர்ந்தவர்கள் சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள். எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்ட அனைவரும் சென்னையிலேயே மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பசும்பொன் விழாவில் பங்கேற்காதது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓபிஎஸ், ஈபிஎஸ் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் விழாவை புறக்கணிக்கவில்லை. உடல்நல குறைவின் காரணமாக ஈபிஎஸ்சால் விழாவில் பங்கேற்க முடியவில்லை. ஓபிஎஸ் மனைவி மறைந்தால் அதற்கு சடங்கு செய்வதற்காக ஓபிஎஸ் விழாவில் பங்கேற்க இயலவில்லை என்று தெரிவித்தார்.