கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது ஏன்?- காவல்துறை விளக்கம்
கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் திருடிய வழக்கில் தொடர்புடைய உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீஸ் சார் சுட்டு பிடித்தனர்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள கோவை காவல் ஆணையர், “கோவையில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்றவர்கள் குனியமுத்தூர் பகுதியில் பதுங்கியிருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது, அவர்கள் போலீசை தாக்க முயற்சித்தனர். அதனால் அவர்கள் மீது தனிப்படை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுட்டுப்பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இர்பான், கல்லார், ஆசிஃப் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் பவாரியா கும்பலா? என போலீசார் விசாரித்துவருகின்றனர்.
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர்களை அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுநரிடமும் விசாரணை மேற்கொண்டுவருகிறோம். திருப்புலி, இரும்புக்கம்பி போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளையர்கள் துணைகரத்தை அரங்கேற்றியுள்ளன. அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் சிசிடிவி பொறுத்துமாறு குடியிருப்பு நலச்சங்கங்களை அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.


