கள்ளக்காதலை விட மறுத்த காதல் கணவன்! மனைவி தூக்கிட்டு தற்கொலை

 
suicide

சென்னையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையால், மனைவி தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide

சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வருபவர் நவீனா(30). இவர் நம்பிராஜன் என்பவரை காதலித்து கடந்த 7ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் ஆறு வயதில் ஒரு மகன் உள்ளான்.இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கணவர் நம்பி ராஜன் நடத்தையில் சந்தேகமடைந்த மனைவி நவீனா, கணவரின் செல்போனை சோதனை செய்த போது அவர் பல பெண்களோடு தனக்கு திருமணம் ஆகவில்லை எனவும் சிலரிடம் தமக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது எனவும் கூறி தகாத தொடர்பில் இருப்பதை கண்டறிந்துள்ளார். 

இது தொடர்பாக அவ்வபோது நவீனாவிற்கும் நம்பிராஜனுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இந்த சண்டை முற்றி நம்பிராஜன் நவீனவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நவீனா, அதிகாலை 4 மணியளவில் தனது அறையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்து கொண்டார். இது தொடர்பாக நவீனாவின் குடும்பத்தினர் அளித்த புகாரில் காசிமேடு போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், நவீனாவிற்கு திருமணமாகி 7 ஆண்டுகள் முழுமை பெறாததால் தண்டையார்பேட்டை ஆர்டிஓ விசாரணைக்காக இவ்வழக்கு சென்றுள்ளது