கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பா? - மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!
தமிழ்நாட்டில் விரைவாக வளர்ந்து வரும் Top Tier 2 cities என்று அழைக்கப்படும் மதுரை, கோவை மாநகரங்களுக்கு மெட்ரோ திட்ட அனுமதி வேண்டி தமிழ்நாடு அரசு DPR-ஐ ஒன்றிய பாஜக அரசிடம் 19.02.2024 அன்று சமர்ப்பித்தது. 20 மாதங்களுக்கு மேலாக அதனைக் கிடப்பில் போட்டுவிட்டு தற்போது 20 இலட்சத்திற்கு குறைவாக மக்கள்தொகை உள்ளதாக கூறி மத்திய அரசு நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மெட்ரோ நிர்வாகம், “மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விளக்கம் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. மெட்ரோ மட்டுமின்றி லைட் மெட்ரோ, பிஆர்டிஎஸ் போக்குவரத்து திட்டங்களுக்கும் விவரம் கேட்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் போக்குவரத்து வசதிகளுக்கான ஆய்வறிக்கையும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே 31.93 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை கருமத்தம்பட்டி வரை, உக்கடம் வலியம்பாளையம் பிரிவு வரை மெட்ரோ ரயில் அமைக்க திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்துள்ளது.


