ஆளுநராகிறார் ஹெச். ராஜா?
நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பின் பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பின் பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என கடந்தாண்டு அவர் அறிவித்திருந்த நிலையில், அவர் ஆளுநராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை சேர்ந்தவருக்கு ஆளுநர் பதவி அளிக்க ஆலோசனை நடப்பதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் தமிழர்களுக்கு பாஜக முக்கியத்துவம் அளிப்பதாக திமுக கூட்டணி விமர்சித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பிறந்த ஹெச். ராஜா, 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், காரைக்குடி தொகுதியிலிருந்து, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் ஆவார் என்பது குறிப்பிடதக்கது.


