அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பிரேமலதா சொன்ன பதில்

 
premalatha premalatha

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என 2026 மார்ச் 18ஆம் தேதி என்னுடைய அடுத்த பிறந்த நாளன்று தெளிவாக சொல்கிறேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Premalatha

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக தேர்தல் கூட்டணி குறித்து அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி அறிவிப்போம். தேமுதிக திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்ததால் வரவேற்றோம்; ஒவ்வொரு வார்த்தையிலும் அரசியல் பின்புலம் இருக்கிறதா? என பார்க்க வேண்டாம். பாஜக போராட்டத்தை திருமாவளவன் ஆதரித்ததால் கூட்டணி சேர்கிறார் என சொல்ல முடியுமா?” என்றார்.

தேமுதிகவுக்கு ராஜ்சய சபா சீட் வழங்குவதாக ஈபிஎஸ் உறுதி அளித்துள்ளதாக பிரேமலதா முன்னதாக கூறியிருந்தார். அதிமுகவுடன் கூட்டணி என இதுவரை கூறி வந்த நிலையில், தற்போது அடுத்தாண்டு கூட்டணி உறுதி செய்யப்படும் என பிரேமலதா விஜயகாந்த்துக்கு மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.