சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பீர்களா ? நடிகை பிரியா பவானி சங்கர் பதில்..!
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான “இந்தியன் 2” திரைப்படத்தில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. “டிமான்ட்டி காலனி 2” திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் சில தோல்வியடைந்ததால் அதற்குக் காரணம் இவர்தான் என ரசிகர்கள் கிண்டல் செய்தது வேதனையாக இருந்ததாகத் தெரிவித்திருந்தார். “டிமான்ட்டி காலனி 2” திரைப்படம் வெற்றி பெற்றதால் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதற்கிடையில், நேர்காணல் ஒன்றில் பேசிய பிரியா பவானி சங்கர், “சினிமாவில் என் உடலை விற்பனைப் பொருளாக விற்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. என் உடலைக் கவர்ச்சியாகக் காட்டி வணிகம் செய்ய மாட்டேன். திரும்பிப் பார்க்கும்போது தவறான விசயத்தைக் கொடுத்துவிட்டோமோ என நினைக்கக் கூடாது. எதிர்மறைக் கதாபாத்திரம் வந்தாலும் மறுக்காமல் நடிக்கத் தயார். இறுதியில் இது சினிமா, அவ்வளவுதான். ஆனால், பேஷன் என்கிற பெயரில் கவர்ச்சியாக உடலைக் காட்டக்கூடாது என உறுதியாக இருக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.