2 கிராம் காசுக்கு வரோமா?? இது தாய்மாமன் உறவு - தவாக தலைவர் வேல்முருகனுக்கு மாணவி பதிலடி..
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு கல்வி விருது விழாவின் இறுதிக்கட்ட விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக ஆண்டுதோறும் கல்வி விருது விழா மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டு நான்கு கட்டங்களாக விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நடத்தப்படுகிறது. அதன்படி இன்று (நான்காம்) இறுதிகட்ட விழா சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.
இதில் சென்னை,மதுரை, சேலம், தூத்துக்குடி விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 39 தொகுதியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 234 மாணவ மாணவிகளுக்கு விஜய் விருது வழங்கி வருகிறார்.

இதனிடையே விருது விழாவில் மாணவிகளை கட்டியணப்பது, அனுமதியின்றி தொடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், அக்கட்சியின் வழக்கறிஞர் சிவமூர்த்தி ஆகியோ தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வரும் நிலையில், "பிற்போக்குத்தனமாக சிலர் பேசுகின்றனர்" என மாணவி ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.
மாணவி பேசியதாவது, “ ஒத்த சீட்டுக்கு அலையுறவங்க 2 கிராம் தங்கத்திற்காக நாங்கள் இங்கு வருவதாக பிற்போக்குத்தனமாக சிலர் பேசுகின்றனர். எங்கள் தலைவருக்கும் எங்களுக்கும் உள்ள உறவு, தாய்மாமன் உறவு மாதிரி.. தாய்க்கே இல்லாத உரிமை தாய்மாமனுக்கு உண்டு.
நாளைய எதிர்காலம் நீங்கள் தான்.. உங்களை பின்பற்றி நடப்பது நாங்கள் தான் அண்ணா” என்று கூறினார். த.வா.க தலைவர் வேல்முருகன் பேச்சுக்கு த.வெ.க கல்வி விருது விழாவில் மாணவி பதிலடி கொடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் மாணவி பேசும் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
கேட்டுச்சா Mr.வண்டுமுருகன்….. @VelmuruganTVK
— Swara TVK ❤️💛 (@SwaraVijay_) June 15, 2025
pic.twitter.com/XUJEzxEJCw


