குழந்தை இல்லாத விரக்தியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் தற்கொலை

 
suicide suicide

திருவள்ளூர் அருகே குழந்தை இல்லாத விரக்தியால் பெண் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ள  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

death

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தேவந்தவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். அவருடைய மனைவி ஜூலி என்கின்ற ஜெகதாம்பாள். இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனர். மேலும்  ஜெகதாம்பாலுக்கு இருதய பிரச்சினை இருந்து வந்ததால் அவருக்கு இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். ஒரு பக்கம் குழந்தை இல்லாத விரக்தியும், மறுபக்கம் இருதய பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த அவர், இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் நடந்து வந்ததை எண்ணி மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் குடும்பத்தில் பிரச்சனை நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்றிருந்த  நிலையில் ஜெகதாம்பாள், மன உளைச்சலில் இருந்து வந்த அவர் வீட்டின் வெளியே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாலை வீட்டிற்கு வந்து பார்த்த கணவர் வீட்டின் முன்பக்க கேட் பூட்டப்பட்டு நீண்ட நேரம் மனைவியை அழைத்தும் வெளியே வராததால் முன்பக்க கேட்டின் பூட்டை உடைத்து வீட்டை திறந்து பார்த்தும் அவர் இல்லாததால் வீட்டின் முன்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது, அதில் அவர் விழுந்து  நீரில் மூழ்கி  இருந்ததை கண்டு  அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் தண்ணீர் தொட்டியில்  இறந்து கிடந்த ஜெகதாம்பாளை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக  பென்னாலூர் பேட்டை போலீசாருக்கு தெரியவந்ததை தொடர்ந்து அவர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர் குழந்தை இல்லாத விரக்தியால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் தண்ணீர் தொட்டில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்ணீர் தொட்டி அருகாமையில் பூப்பறிக்க சென்றபோது தவறி விழுந்து இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.