பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு- பதற வைக்கும் சிசிடிவி காட்சி
திண்டுக்கல் நத்தம் சாலையில் தனியார் பேருந்தில் பயணம் செய்தவர் தவறி விழுந்து பலிஆன சிசி டிவி காட்சிகள் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கலில் இருந்து நத்தம் நோக்கி தனியார் பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. 50க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணித்து வந்த நிலையில், சாணார்பட்டி அருகே உள்ள கோபால்பட்டியை அடுத்த வி.எஸ் கோட்டை அருகே உள்ள வையாளிப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி அமராவதி( வயது 50). இவர் நேற்று கோபால்பட்டியில் இருந்து நத்தம் நோக்கி தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கணவாய்பட்டி கருப்பு கோவில் அருகே பஸ் சென்ற போது பேருந்து ஓட்டுனர் சடனாக பிரேக் போட்டதால் அமராவதி பஸ்ஸிலிருந்து எதிர்பாராத விதமாக படிக்கட்டு வழியே கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு!
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 4, 2025
பதற வைக்கும் சிசிடிவி காட்சி!#Dindigul #Bus #Accident #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/tGOUDz6Kxx
தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு!
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 4, 2025
பதற வைக்கும் சிசிடிவி காட்சி!#Dindigul #Bus #Accident #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/tGOUDz6Kxx
இதில் சிகிச்சை பலனின்றி அமராவதி பரிதாபமாக உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் பேருந்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்பொழுது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


