ரேசன் கடை க்யூவில் நின்றபெண் மயங்கி விழ...தீயணைப்பு படையினர் மீட்பு

 
ர்

ரேஷன் கடை கியூவில் நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருந்து மயங்கி விழுந்த பெண்ணை தீயணைப்பு படையினர் வந்து ஏணி உதவியுடன் மீட்டுள்ளனர்.   நீண்ட நேரம் கால் கடுக்க நின்றதால் அருகிலிருந்த கேணி சுற்றுச்சுவரில் உட்கார்ந்து கொஞ்சம் இளைப்பாறி விட்டுச் செல்லலாம் என்று அப்பெண்மணி நினைத்து உட்கார,  அந்த நேரம் மயங்கி கிணற்றுக்குள் விழுந்து இருக்கிறார்.  அதன்பின்னர்தான் அப்பகுதியில் இருந்த டிரைவர்,   தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்கப்பட்டிருக்கிறார் .

ர்ர்

மேலூர் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ளது அந்த நியாயவிலைக்கடை.   அங்கு ரேஷன் பொருட்கள் வாங்க நீண்ட கியூவில்  காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். சங்கீதா என்பவரும் நீண்ட நேரம் கால் கடுக்க நின்று கொண்டிருந்திருக்கிறார். 

 நீண்ட நேரம் அவர் கால்கடுக்க நின்று கொண்டிருந்ததால் அங்கு இருந்த கிணற்றின் சுவரில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இளைப்பாறி விட்டுச் செல்லலாம் என்று அமர்ந்திருக்கிறார்.   அப்போது திடீரென்று மயங்கி  கிணற்றுக்குள் தவறி விழுந்து இருக்கிறார்.   20 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .

உடனே அப்பகுதியில் இருந்த டிரைவர் பாலா என்கிற இளைஞர் உடனே குதித்து சங்கீதாவை மூழ்க விடாமல் ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறு கையால் குழாயையும் பிடித்துக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.   அதற்குள் தீயணைப்பு துறையினர் விரைந்து வரவே அவர்கள் கிணற்றுக்குள் ஏணியை இறங்கி சங்கீதாவையும் அந்த இளைஞரையும் மீட்டிருக்கிறார்கள்.