3 பெண் குழந்தை- அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை பெற்றுக் கொண்ட பெண் மீண்டும் கர்ப்பமானதாக புகார் எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ் லதா தம்பதினர். இவர் ஆட்டோ ஓட்டுப் தொழில் செய்து வருகிறார். 12 வருடங்களுக்கு முன்பு வீட்டின் எதிர்ப்பை மீறி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 11 வயதில் சஞ்சனா என்ற மகளும் ஆறு வயதில் சோஷீகா இன்று மகளும் இருந்து நிலையில் மீண்டும் லதா கர்ப்பம் அடைந்துள்ளார். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு லதாவை குழந்தை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அப்பொழுது கணவன் மனைவி இருவரும் இனிமேல் எங்களுக்கு குழந்தை வேண்டாம் என கூறி குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன்செய்வதற்கு கையெழுத்து போட்டு உள்ளனர்.
அதன் பிறகு அக்டோபர் நான்காம் தேதி அருவை சிகிச்சை மூலம் அதிகாலை 7 மணி அளவில் மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. அங்கு லதாவுக்கு ஆப்ரேஷன் செய்ததால் தையல் மருத்துவரால் போடப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் மருத்துவமனையில் தங்கிய நிலையில் கூடுவாஞ்சேரியில் உள்ள தனது வீட்டுக்கு லதா வந்துள்ளார். வந்த சிறு நாட்களிலே லதாவுக்கு போடப்பட்ட தையல் பிரிந்து சிதிலமடைந்து காணப்பட்டுள்ளது. மிகவும் அவதிப்பட்ட லதா மீண்டும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று அனுமதிக்கபட்ட நிலையில் போடப்பட்ட தையலை அகற்றிவிட்டு மீண்டும் தையல் போட்டதால் கடந்த ஒரு மாத காலமாக கடும் அவதி அடைந்து வருகிறார்.
இந்த நிலையில் குழந்தை பிறந்து ஒரு வருடம் முடிந்த நிலையில் வம்சிகா என்ற பெயர் வைத்து குழந்தைக்கு முதல் பிறந்தநாளையும் கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாகவே லதாவிற்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் வெளியே கடனை வாங்கிக்கொண்டு பல்லாவரத்தில் உள்ள தனியார் சுடர் மருத்துவமனைக்குச் சென்று அனைத்து சோதனைகளையும் செய்த போது அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதில் நீங்கள் கர்ப்பம் அடைந்து உள்ளீர்கள் கர்ப்பப்பையில் குழந்தை வளர்ந்து வருவதாக தெரிவித்த நிலையில் அப்பொழுது எனக்கு ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த நிலையில் எப்படி என கேட்டு மருத்துவமனையிலேயே கூச்சலிட்டு என்னால் குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாது ஏற்கனவே அரசு மருத்துவமனையில் குழந்தை கட்டுப்பாடு சிகிச்சையை செய்துள்ளேன் எப்படி எனக்கு மீண்டும் குழந்தை பிறக்கும் என கதறி அழுத்துள்ளார். ஒரு வேலையாக வீட்டிற்கு வந்த கணவன் மனைவி இருவரும் என்ன செய்வது தெரியாமல் கதறி அழுந்துள்ளனர். தொடர்ந்து தற்போது செங்கல்பட்டு பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காத அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.