பெண்கள் இலவச பேருந்து நடத்துனரின் அட்டகாசங்கள்- உடனே நடவடிக்கை எடுத்த தவெக அரசு
மகளிருக்கு வழங்கப்படும் இலவச டிக்கெட்டை கிழித்த விவகாரத்தில் அரசு பேருந்து நடத்துநரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் ஏறும் பேருந்து நிலையங்கள் பஸ்ஸை நிறுத்தாமல் பெண்களுக்கு டிக்கெட் கொடுத்ததைப் போல் டிக்கெட்டை பதிவு செய்து அவரே டிக்கெட்டை கிழித்து தூக்கிப் போடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. அந்த வீடியோவில், சென்னை அம்பத்தூர்- தீவுத்திடல் வழித்தட அரசுப்பேருந்து ஒன்றில், பெண் பயணிகளே இல்லாத நிலையில் இலவச டிக்கெட்டுகளை நடத்துனரே கிழித்து போடுகிறார். Last Tripன் போது பணியை முடித்து விரைவாக வீட்டுக்கு செல்ல வேண்டி பேருந்துகளை பேருந்து நிலையத்தில் முறையாக நிறுத்துவதில்லை என தெரிகிறது. பேருந்து நிறுத்தப்படாதது குறித்து மக்கள் புகார் அளித்தால் அதை சமாளிக்க நடத்துனர்கள் இவ்வாறு முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. மகளிருக்கான கட்டணமில்ல பயணிச்சீட்டுகளை தங்கலுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடை்ய அம்பத்தூர் பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் கோவிந்தன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

