அட இப்படியும் ஒரு போட்டியா?... கப் கப்புனு பீடி வழித்த பெண்கள் - வைரல் வீடியோ!

 
பீடி பிடிக்கும்

தமிழர் திருநாள் பொங்கல் திருநாள் தமிழ்நாடு முழுவதும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. பொங்கல் திருநாளில் பொங்கல் வைத்து உயிர்களுக்கு ஆதாரமான சூரியனையும் நாம் நம்பியிருக்கும் மண்ணையும் வணங்கி மக்கள் வழிபாடுவார்கள். இதுதவிர வீரத்தைப் பறைசாற்றக் கூடிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும். அந்த வகையில் இன்று அலங்கநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

பீடி பிடிக்கும் போட்டி

இது ஒருபுறம் இருந்தாலும் மகிழ்ச்சியாக கொண்டாடக் கூடிய பொங்கல் விளையாட்டுகளுக்கு என்றுமே மவுசு தனி தான். கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள். ஆனால் இம்முறை கொஞ்சம் சிக்கல் இருந்தது. ஏனெனில் நேற்று முழு ஊரடங்கு. இதனால் இதுபோன்ற போட்டிகள் நடத்த அரசு அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக ஏராளமான போட்டிகள் சனிக்கிழமையிலேயே நடந்து முடிந்தன. அதேபோல இன்றும் சில போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.


அந்த வகையில் கடந்த சனிக்கிழமை கிராமம் ஒன்றில் நடந்த பீடி பிடிக்கும் போட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டி பெண்களுக்கானது என்பதே அதன் சுவாரசியம். அதாவது இப்போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் முழு பீடியையும் விரைவாக இழுத்து முடிக்க வேண்டும். யார் முதலில் இழுத்து முடிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். ஊர் மக்களின் பலத்த ஆவரவரத்துக்கு மத்தியில் களமிறங்கிய 4 பெண்கள் போட்டி போட்டு பீடியை வேகமாக புகைத்துள்ளனர். இந்தக் காட்சிகள் தான் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

World No Tobacco Day 2019 | Indestructible chemistry between tobacco and  cancer - The Statesman

இறுதியில் குறைவான அளவுள்ள பீடியை போட்டியை நடுவரிடம் ஒப்படைத்த ஒரு பெண் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார். ஆண்களே புகை பிடித்தல் கூடாது. நுரையீரலுக்கு கேடு என அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில், பெண்களை ஊக்குவிக்கும் வண்ணம் பீடி பிடிக்கும் போட்டி நடத்தப்படுவதாகவும் இதனை எதிர்த்து காவல் துறையினரும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை பார்த்து சிறுவர்கள் தவறான வழியில் செல்லக்கூடும் என்பதால் இதுபோன்ற விளையாட்டுகளை அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.