"மகளிர் சுயமரியாதை உணர்வுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம்" - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

 
mk stalin

வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாகுபாடின்றி அனைவருக்கும் திட்டம் தீட்டி ஆட்சி செய்து வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பப்பதிவு முகாமை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தருமபுரியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பப்பதிவு முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அத்துடன்  தமிழ்நாடு முழுவதும் 36,000 இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் , நேரத்தில் குடும்பத் தலைவிகள் முகாமில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

MK Stalin

இந்நிலையில் தருமபுரியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் பதிவு முகாமை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேசிய போது, மகளிர் சுய உதவிக்குழு திட்டத்துக்கு விதை போட்ட மண் தான் தருமபுரி;தருமபுரியில் விதைத்தால், அது தமிழ்நாடு முழுவதும் சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது; கோட்டைக்கு சென்ற நான் இட்ட முதல் கையெழுத்து, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை. மாதம் ரூ. 1,000 என்பது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை. வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாகுபாடின்றி அனைவருக்கும் திட்டம் தீட்டி ஆட்சி செய்து வருகிறோம்;அடுத்தாண்டு மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு, ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்; மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி;பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டுவர உழைக்கிறோம்;

MK Stalin

அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும்;காலை உணவு திட்டம் மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்;காலை உணவு திட்டம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும்; கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுயமரியாதை உணர்வுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் "என்றார்.