அன்புமணி இன்று பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மேடை பணிகள் தடுத்து நிறுத்தம்
பாமக தலைவர் அன்புமணி இன்று பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மேடை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பாமக தலைவர் அன்புமணியின் தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணம் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். 100 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணம் இன்று இரண்டாவது நாளாக மாலை 4-மணிக்கு செங்கல்பட்டில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டில் அரசு மருத்துவமனை அருகே ஆலன் சாலை முதல் ராட்டினங்கிணறு பகுதி வரை நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. தொடர்ந்து இராட்டினங்கிணறு பகுதியில் மேடை அமைத்து பேச திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், காவல்துறையினர் மேடை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகு போக்குவரத்து இடையூறு இல்லாமல் பொதுக்கூட்ட மேடையை அமைக்க வேண்டும் என காவல்துறையினர் கூறி உள்ளனர்.


