"மத்தியில் நிலவும் நம்முடைய ஆதரவு அலையை வாக்குகளாக்க உழைக்க வேண்டும்" - அமைச்சர் உதயநிதி
மக்கள் மத்தியில் நிலவும் நம்முடைய ஆதரவு அலையை வாக்குகளாக்க உழைக்க வேண்டுமென உரையாற்றினோம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கழக நாடாளுமன்ற மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை – புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று ஆலோசனை நடத்தினோம்.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கழக நாடாளுமன்ற மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை – புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று ஆலோசனை நடத்தினோம்.
— Udhay (@Udhaystalin) January 29, 2024
சிவகங்கை… pic.twitter.com/COFGhvQBp9
சிவகங்கை தொகுதிக்குட்பட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் – மாவட்ட- ஒன்றிய - நகர - பேரூர் கழக நிர்வாகிகள் - உள்ளாட்சி பிரதிநிதிகள் போன்றவர்களிடம், தொகுதியில் உள்ள சூழல்களைக் கேட்டறிந்தோம்.
தொகுதிப் பார்வையாளர்கள் – பாக அளவிலான பொறுப்பாளர்கள் – கழக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மக்கள் மத்தியில் நிலவும் நம்முடைய ஆதரவு அலையை வாக்குகளாக்க உழைக்க வேண்டுமென உரையாற்றினோம் என்று குறிப்பிட்டுள்ளார்.