பைனான்சியரை கடத்தி கொலை செய்த ஊழியர்கள்! திடுக்கிடும் தகவல்

 
கொலை

வெப்படையில் பைனான்சியர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பள்ளிப்பாளையத்தில் கடத்தப்பட்ட தொழிலதிபர் கொலை- ஏரிக்கரையில் சடலமாக மீட்பு  | Tamil news Kidnapped businessman killed in Pallipalayam Dead body  recovered on lake shore

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே உள்ள பாதரை கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதம். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிபாளையம் வடக்கு இளைஞரணி  ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக வெப்படையில் அருள்முருகன் என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய போது அவர் மீது மிளகாய் பொடி தூவி மர்ம கும்பல் கடத்தி சென்றது. கடந்த 2 நாட்களாக போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு சங்ககிரி அருகே வைகுந்தம் மேட்டுக்காடு என்ற இடத்தில் சடலமாக அவர் மீட்கப்பட்டார். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருதரதுவமனைக்கு கொண்டு சென்றனர். 

இந்நிலையில் கௌதம் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் வெப்படை காவல் நிலையம் முன்பாக திரண்டனர்.  மேலும் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.  கௌதமை கொலை செய்த 3 பேர் திருச்சியில் பிடிபட்டுள்ளனர். அவர்கள் கௌதம் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த குணசேகரன், பிரகாஷ் மற்றும் தீபன் என்பது தெரியவந்துள்ளது.  இவர்கள் மேலும் ஐந்து பேருடன் சேர்ந்து மொத்தம் எட்டு பேராக கௌதமை கடத்திச்சென்று தலை முகம் உடல் உள்ளிட்ட எட்டு இடங்களில் கொடூரமாக குத்தி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.  கொலை செய்யப்பட்ட கௌதமின் மாமனார் குமார் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் குணசேகரன் பணியாற்றி வந்ததும் அங்கு 14 லட்சம் ரூபாய் கையாடல் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இதனால் அந்த பணத்தை தரும்வரை தனது நிறுவனத்தில் பணிபுரியுமாறு கூறி கௌதம் குணசேகரனை அழைத்து வந்து தன்னிடம் பணியமர்த்தி இருக்கின்றார்.   இந்நிலையில் கௌதமை  ஊழியர்கள் மூன்று பேரும் கடத்திச் சென்று படுகொலை செய்திருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருச்சியில் பிடிபட்ட உள்ள மூன்று பேரையும் தற்போது போலீசார் நாமக்கல் அழைத்து வந்து தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர்.