பிரதமரின் பதவியேற்பு விழாவில் விவிஐபி வரிசையில் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், திருநங்கைகள் !
Jun 8, 2024, 06:15 IST1717807549000
நாட்டின் பிரதமராக வரும் 9 ஆம் தேதி மோடி பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. முன்னதாக 8 ஆம் தேதி பதவி ஏற்பு இருந்தது. பதவி ஏற்பு விழாவில் உலக தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் 9 ஆம் தேதி தள்ளி வைக்கப்ட்டது. இதற்கான பதவி ஏற்பு இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.
பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் அரசியல் தலைவர்கள், பிரபலங்களை தாண்டி புதிய நாடாளுமன்றத்தை கட்டிய கட்டிட தொழிலாளர்கள், வந்தே பாரத் ரயில் மற்றும் மெட்ரோ ரயில்கள் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர்கள், துப்புரவு பணியாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்டோரை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்குமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இவர்கள் அனைவரும் விவிஐபி வரிசையில் அமர வைக்கப்பட உள்ளனர்.